தேசபந்து தென்னகோன் துறவியாக விகாரையில் மறைந்து வாழ்கின்றாரா? அமைச்சரின் பதில்

தேசபந்து தென்னகோன் துறவியாக விகாரையில் மறைந்து வாழ்கின்றாரா? அமைச்சரின் பதில்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக பாதுகாப்புப் படையினர் இரவும் பகலும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று (11) காலை ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

​​தேசபந்து தென்னகோன் முன்னாள் அமைச்சரின் வீட்டில் மறைந்திருப்பதாக சமூகத்தில் ஒரு வதந்தி பரவி வருகிறதா என்றும், அதற்கேற்ப அவரது வீடு சோதனை செய்யப்பட்டதா என்றும் ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் இதன்போது கேள்வியெழுப்பினர்.

மேலும், தேசபந்து தென்னகோன் தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டு ஒரு விகாரையில் துறவியாக தங்கியிருப்பதாக வதந்தி பரவி வருவதாகவும் ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் குறிப்பிட்டனர்.

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என்ற வகையில் பொலிஸாருக்கு இதுபோன்ற தகவல்களை வழங்குவது அவர்களின் பொறுப்பு என்று கூறினார்.

Share This