ட்ரம்ப் மற்று எலான் மஸ்க் விரைவில் கைது – பிரபல டிக்டாக்கர் கணிப்பு

ட்ரம்ப் மற்று எலான் மஸ்க் விரைவில் கைது – பிரபல டிக்டாக்கர் கணிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்டவர்களின் முடிவு நெருங்கிவிட்டதாக டிக்டொக்கில் செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவரான ட்ராகன்மேன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ட்ரம்ப், துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், ட்ராகன்மேன் என்ற இந்த நபர் டொனால்ட் ட்ரம்ப், இரண்டாவது பதவிக்காலத்தில் பதவியேற்கும் நாளில் (ஜனவரி 20, 2025) பதவி ஏற்பதை தடுப்பார் என்று பொய்யாகக் கணித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது அவரது கணிப்பு இணையவாசிகளை கோபப்படுத்தியது, அவரது “தவறான” கணிப்புகளுக்காக அவரை கேலி செய்தனர். பயனர்களில் ஒருவர் அவரை “பைத்தியக்காரர்” என்று கூட வர்ணித்துள்ளார்.

டொனால்ட் டிரம்பின் எதிர்காலம் பற்றி என்ன கணித்திருந்தார்?

“ட்ரம்ப் விரைவில் கைது செய்யப்படுவார் என்று நான் நம்புகிறேன். அவர் பதவியேற்பதற்கு முன்பே அது நடக்கும் என்று நினைத்தேன். ட்ரம்ப், ஜே.டி. வான்ஸ் மற்றும் எலோன் மஸ்க் மற்றும் திரைக்குப் பின்னால் உள்ள அனைவரும் நள்ளிரவில் கைது செய்யப்படுவார்கள்.

அதுதான் எனது உணர்வு மற்றும் நம்பிக்கை,” என்று காணொளில் ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனது கருத்துகளை நியாயப்படுத்த பைபிளை மேற்கோள் காட்டி தனது கணிப்பை உறுதிப்படுத்த முயன்றிருந்தார்.

 

Share This