இரு வேறு இடங்களில் பதிவான கோர விபத்து – ஐவர் உயிரிழப்பு

இரு வேறு இடங்களில் பதிவான கோர விபத்து – ஐவர் உயிரிழப்பு

மாதம்பே – கலஹிடியாவ பகுதியில் முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்து நடந்த நேரத்தில் முச்சக்கர வண்டியில் ஓட்டுநர் உட்பட ஒன்பது பேர் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மினுவங்கொட மற்றும் ராகம பகுதிகளைச் சேர்ந்த 32, 36 வயதுடைய பெண்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் உட்பட மேலும் இரண்டு ஆண்கள், இரண்டு சிறுவர்கள் மற்றும் இரண்டு சிறுமிகள் காயமடைந்து சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலவில புனித அன்னாள் தேவாலயத்தில் வருடாந்திர திருவிழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​நேற்று (09) மதியம் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாதம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை், வரக்கபொல பகுதியில் இன்று காலை முச்சக்கர வண்டியுடன் பஸ் மோதியதில் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share This