இந்தியாவிலிருந்து அரிசி: வரிசையில் தனியார் இறக்குமதியாளர்கள்
அரிசி தட்டுப்பாட்டுக்கு உடனடி தீர்வாக, 25000 – 30000 மெட்றிக் டொன்னுக்கு இடைப்பட்ட அரிசித் தொகையை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய கோட்டையில் உள்ள தனியார் இறக்குமதியாளர்கள் முன்பதிவு செய்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தனியார் துறையினருக்கும் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்தின் மூலம் வழங்கப்பட்ட அனுமதியின்படி , இந்த அரிசி இருப்புக்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.
அதன்படி, கோட்டையில் உள்ள சுமார் 50 இறக்குமதியாளர்கள் இந்தியாவில் அரிசி இறக்குமதிக்கு முன்பதிவு செய்துள்ளனர்.
அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள டிசம்பர் 31ஆம் திகதி வரை போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தினால் சிறிதளவு அரிசியை மாத்திரமே இறக்குமதி செய்ய முடியும் என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாடு, பச்சையரிசி , சம்பா அரிசிகள் இவ்வாறு இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.