ட்ரம்ப் மற்றும் செலன்ஸ்க்கி இடையே இன்று சந்திப்பு – கனிம ஒப்பந்தம் கைச்சாத்தாகுமா?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடோமிர் செலென்ஸ்கி இடையேயான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரம்பின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற நிலையில் இதன்போது
பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடோமிர் ஜெலென்ஸ்கியின் வருகையும் ட்ரம்ப் உறுதிப்படுத்தியிருந்தார்.
அவரது இந்த விஜயத்தின் போது அமெரிக்கா மற்றும் உக்ரைன் ஒரு விரிவான கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று டிரம்ப் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் எதிர்காலத்தில் உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அமெரிக்கா எதனையும் வழங்காது என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.