முச்சக்கர வண்டியின் புதிய விலை 02 மில்லியன் ரூபாவை தாண்டும்

முதல் தொகுதி வாகனங்களைப் பெற்ற பின்னர் புதிய பஜாஜ் ஆர்.இ முச்சக்கர வண்டி, பத்தொன்பது இலட்சத்து தொன்னூற்று ஐயாயிரத்திற்கு (1,995,000) விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனம் தங்களிடம் தற்போது புதிய வாகனங்கள் இல்லை என்றாலும் முன்பதிவுகள் திறந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
பஜாஜ் முச்சக்கர வண்டிகள் இலங்கையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாகனங்களில் ஒன்றாகும்.