புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் நால்வர் கைது

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் நால்வர் கைது

பதுளையில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதுளை, வேவல்ஹின்ன, பலகொல்ல பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியிலிருந்து புதையல் தோண்டுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

தம்புள்ளை, வேவல்ஹின்ன, பலகொல்ல பகுதிகளைச் சேர்ந்த 21 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட நான்கு சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This