கழுகு திரைப்பட நடிகரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான அறிவிப்பு

அலிபாபா எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமான நடிகர் கிருஷ்ணா, கற்றது களவு, யாமிருக்க பயமேன், வல்லினம் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
இவர் நடித்ததில் கழுகு, மாரி ஆகிய திரைப்படங்கள் பிரபலமாக பேசப்பட்டது.
இவ்வாறிருக்க இவரது 48 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அறிமுக இயக்குநர் பாலகிருஷ்ணா இயக்கத்தில் மனு மந்திரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் அவரது 25 ஆவது திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கு தற்காலிகமாக கே.கே25 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப் படத்தின் மேலதிக அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.