இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர்

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர்

மண்டலகல போம்புகலகே சுமித் பிரியந்த என்று அறியப்படும் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்று இரவு (12.02.2025) அவர் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபரை குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) காவலில் எடுத்துள்ளதுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதில் காவல் துறைத் தலைவர் (ஐ.ஜி.பி) தலைமையிலான உயர்மட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து சந்தேகநபர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

குருவிட்ட பகுதியில் ஐந்து மில்லியன் ரூபா பணம் பறித்தமை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் மிரிஹானவில் கையெறி குண்டுகளை வைத்திருத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக பிரியந்த தேடப்பட்டு வந்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் போது, ​​சந்தேகநபர் நாட்டை விட்டு தப்பிச் சென்று இந்தியாவில் குடியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், விரிவான ஒருங்கிணைப்பு மற்றும் பதில் காவல் துறைத் தலைவரின் நேரடித் தலையீட்டைத் தொடர்ந்து, சந்தேகநபர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This