76 ஆவது குடியரசு தின நிகழ்வு…இந்தியா வந்தடைந்தார் இந்தோனேஷிய பிரதமர்
எதிர்வரும் 26 ஆம் திகதி தலைநகர் டில்லியில் நடைபெறவிருக்கும் நாட்டின் 76 ஆவது குடியரசு தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்தோனேஷியா பிரதமர் பிரபோவோ சுபியன்டோ இந்தியா வந்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் இந் நிகழ்ச்சியில் பங்கேற்க ஏனைய நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். அதன்படி இந்த வருடம் இந்தோனேஷிய பிரதமர் அழைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நான்கு நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி, வெளியறவுத் துறை அமைச்சர் ஆகியோரையும் சந்தித்து உரையாடவுள்ளதோடு, நாளை சனிக்கிழமை ராஷ்டிரிய பவனில் நடைபெறவுள்ள வரவேற்பு நிகழ்ச்சியும் கலந்துகொள்ளவுள்ளார் சுபியன்டோ.
பாதுகாப்பு, கடல்சார், டிஜிட்டல் தொழில்நுட்ப மேம்பாடு தொடர்பிலும் ஆலோசனை நடத்தவுள்ளதாக பிரதமர் சுபியன்டோ தெரிவித்துள்ளார்.