2025 ஒஸ்கார் விருது…இறுதிப் பட்டியலில் இந்திய குறும்படம் ‘அனுஜா’

சினிமாவைப் பொறுத்தவரையில் எந்தவொரு விருதுமே கலைஞனுக்கு பெருமை சேர்ப்பது தான். அதிலும் ஒஸ்கார் விருது தலைசிறந்த விருதாக கருதப்படுகிறது.
அதன்படி ஒவ்வொரு வருடமும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் என பல பிரிவுகளின் கீழ் இந்த ஒஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் இந்த விழா நடைபெறும். அதனடிப்படையில் 97 ஆவது ஒஸ்கர் விருது விழா எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த லைவ் எக்ஷ்ன் குறும்படப் பிரிவில், அனுஜா எனும் இந்திய குறும்படம் இடம்பிடித்துள்ளது.
9 வயதான சிறுமி குழந்தை தொழிலாளியாக பணிபுரிந்து படும் துன்பங்கள் குறித்து இப் படம் பேசுகிறது.
மிண்டி கலிங், குனீத் மோங்கா கபூர், பிரியங்கா சோப்ரா ஆகியோர் இப் படத்தின் தயாரிப்பு குழுவில் அடங்குவர்.