
எட்டு கிலோ கேரள கஞ்சாவுடன் 4 பேர் கைது
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் 108 கிலோ கேரள கஞ்சாவுடன் 4 பேர் இன்றைய தினம் (20) கைது செய்யப்பட்டனர்.
குருநகரைச் சேர்ந்த இருவர் மற்றும் பூநகரி, மன்னாரைச் சேர்ந்த தலா ஒருவர் என நால்வர் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
விசாரணைகளுக்கு பின்னர் சந்தேகநபர்களையும், கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
CATEGORIES இலங்கை
TAGS கேரள கஞ்சா
