ஹட்டன் பஸ் நிலையத்திலிருந்து பயணிக்கும் 34 பஸ்கள் போக்குவரத்து சேவையினை முன்னெடுக்கத் தடை

ஹட்டன் பஸ் நிலையத்திலிருந்து பயணிக்கும் 34 பஸ்கள் போக்குவரத்து சேவையினை முன்னெடுக்கத் தடை

ஹட்டன் பஸ் நிலையத்திலிருந்து பயணிக்கும் 34 பஸ்கள் போக்குவரத்து சேவையினை முன்னெடுப்பதற்கு நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகனப் பரிசோதகர் தடை விதித்துள்ளார்.

மோட்டார் வாகன பரிசோதகர்கள் மற்றும் ஹட்டன் தலைமையக பொலிஸார் இணைந்து நேற்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே தடை விதிக்கப்பட்டது.

45 பஸ்கள் சோதனைக்குப்படுத்தப்பட்ட நிலையில், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 15 பஸ்களும் 19 தனியார் பஸ்களும் போக்குவரத்து சேவையினை முன்னெடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது.

பஸ்களில் பயணிகளுக்கு ஏற்படும் சிரமம் மற்றும் வேகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களைக் கருத்திற் கொண்டு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்டுள்ள பஸ்களில் உள்ள குறைபாடுகளை ஒரு மாதத்திற்குள் நிவர்த்தி செய்யுமாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிவர்த்தி செய்யாத பட்சத்தில் குறித்த பஸ்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

 

 

CATEGORIES
TAGS
Share This