பொலிஸ் சேவையில் 28,000 வெற்றிடங்கள்

தற்போது பொலிஸ் சேவையில் 28,000 வெற்றிடங்கள் உள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
தற்போது பொலிஸ் அதிகாரிகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. பொலிஸ் சேவையில் நிலவும் 5,000 வெற்றிடங்களுக்காக உடனடியாக ஆட்சேர்ப்பு செய்ய
அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. 5,000 கீழ்நிலை பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க எதிர்பார்த்துள்ளோம்.
இதனிடையே, விசாரணை தரத்தில் உள்ள 1,500 அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளோம்” என்றார்.