
முப்படைகளிலிருந்து உத்தியோகப்பூர்வமாக விலகிச் செல்லாத 2325 பேர் கைது
முப்படைகளிலிருந்து உத்தியோகப்பூர்வமாக விலகிச் செல்லாத அதிகாரிகள் உட்பட 2325 படைவீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 2,017 பேர் இராணுவத்தினர் என்பதுடன் 145 பேர் கடற்படையினர் மற்றும் 163 பேர் விமானப்படையினர் ஆவர்.
மேலும் முப்படைகளைச் சேர்ந்த 281 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
CATEGORIES இலங்கை
