2026 உலகக் கிண்ண தொடரே தனது கடைசிப் போட்டியாக இருக்கும் – ரொனால்டோ

2026 உலகக் கிண்ண தொடரே தனது கடைசிப் போட்டியாக இருக்கும் – ரொனால்டோ

2026 உலகக் கிண்ண தொடரே தனது கடைசிப் போட்டியாக இருக்கும் என போர்த்துகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அடுத்த ஓரிரு வருடங்களில் கால்பந்திலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 40 வயதான அவர் இதுவரை தேசிய மற்றும் கழகங்களுக்காக 953 கோல்களை அடித்துள்ளார்.

அடுத்த ஆண்டு கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பை, ரொனால்டோவின் ஆறாவது உலகக் கிண்ண தொடராகும்.

இந்நிலையில், ரியாத்தில் நடந்த டூரிஸ் உச்சி மாநாட்டில் நேர்காணல் ஒன்றின் போது, 2026 தனது கடைசி உலகக் கிண்ண தொடராக இருக்குமா என்று கேட்டபோது, ​​”நிச்சயமாக, ஆம் என ரொனால்டோ பதிலளித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் அல்-நாசர் கழகத்திற்காக தற்போது விளையாடி வரும் ரொனால்டோ  சர்வதேசப் போட்டிகளில் இதுவரை, 143 கோல்களை அடித்து முதலிடத்தில் நீடிக்கின்றார்.

அத்துடன், ஆயிரம் கோல்கள் என்ற தனது இலக்கை நோக்கியும் அவர் விளையாடி வருகின்றார்.

கடந்த வாரம் விரைவில் ஓய்வு பெருவதாக அறிவித்த ரொனால்டோ, அடுத்த இரண்டு ஆண்டுகள் விளையாடவுள்ளதை தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.

Share This