சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க 120 குழுக்கள் கடமையில்

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க 120 குழுக்கள் கடமையில்

சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையின் 120 குழுக்கள் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன.

12 மாவட்டங்களில் இந்த குழுக்கள் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் புத்திக்க சம்பத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக விமானப்படையின் 04 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.இதற்காக பெல் 412 ரக விமானமும் தயார்நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலையால் பாதிக்கப்பட்டடோரின் எண்ணிக்கை 4,623 வரை அதிகரித்துள்ளது.

12 மாவட்டங்களில் பலத்த மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலையால் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் 30 குடும்பங்களைச் சேர்ந்த 129 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This