கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று திங்கட்கிழமை காலை 08.30 முதல் இரவு 08.30 வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பேலியகொடை, வத்தளை, ஜா – எல , கட்டுநாயக்க, சீதுவை நகர சபைக்கு உட்பட்ட பகுதிகள், களனி, பியகம, மஹர,
தொம்பே, கந்தானை, மினுவாங்கொடை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட
பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This