அரச வங்கி ஒன்றில் 107 மோசடி சம்பவங்கள் பதிவு!
அரசாங்கத்திற்கு சொந்தமான வங்கி ஒன்றில் இடம்பெற்றுள்ள 107 மோசடி சம்பவங்கள் காரணமாக அந்த வங்கியில் 81,715,811 ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த வங்கியின் அட்டை மையத்தில் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள பல வங்கிக் கிகைகளில் ஏற்பட்டுள்ள மோசடி சம்பவங்கள் காரணமாக ஏற்பட்ட நட்டங்களால் இவ்வாண்டு மே மாதம் 31ஆம் திகதியாகும் போது இந்த நட்ட மிகுதி காணப்படுவதாக கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
தன்னியக்க வங்கி இயந்திரங்களில் (ஏடிஎம்) மோசடியான முறையில் பணத்தை பெற்றுக்கொள்ளுதல், அடகு நகைகளை மோசடியான முறையில் பெற்றுக்கொள்ளுதல், தன்னியக்க வங்கி இயந்திரங்களில் (ஏடிஎம்) பணத்தை ஏற்றும் போது மோசடி செய்தல், வங்கி ஊழியர்கள் மற்றும் பிற வெளி தரப்பினரால் சேமிப்ப கணக்குகளில் இருந்து பணம் பெற்று, க்ளைம் வவுச்சர்கள் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பணத்தை மோசடி செய்தல், நிலையான வைப்புத்தொகையில் பணம் எடுத்தல், ஈ வணிக பரிவர்த்தனைகள் மூலம் பணத்தை ஏமாற்றுதல் போன்றவற்றின் மூலம் இந்த பண மோசடிகள் செய்யப்பட்டுள்ளதாக தணிக்கை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி 8,096,767 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளன. மொத்த மோசடிகளில் 30 வங்கியின் ஊழியர்களால் செய்யப்பட்டவை மற்றும் மோசடி செய்யப்பட்ட மொத்தத் தொகை 89.88 மில்லியன் ரூபாய் எனவும் 60 வீதம் என்று சுட்டிக்காட்டியுள்ளது.