காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 105 பலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 105 பலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

கடந்த 24 மணித்தியாலங்களில் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 105 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் இஸ்ரேலின் இந்த தாக்குதலில் 530 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காசாவில் போர் நிறுத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகும் 24 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக சந்தித்த போதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் முற்றுகை காரணமாக காசாவில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முற்றுகையிடப்பட்ட பலஸ்தீன பிரதேசத்தில் மேலும் உயிரிழப்புகள் பதிவாககூடும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

இஸ்ரேல்ஹமாஸ் மோதல் காரணமாக இதுவரை 57,575 பேர் உயிரிழந்துள்ளதுடன் 136,879 பேர் காயமடைந்துள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Share This