சமஷ்டி கோரிக்கையை முன்வைத்து கிளிநொச்சியில் 100 நாள் போராட்டம்

சமஷ்டி கோரிக்கையை முன்வைத்து கிளிநொச்சியில் 100 நாள் போராட்டம்

சமஷ்டி கோரிக்கையை முன்வைத்து வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு முன்னெடுத்துள்ள 100 நாள் போராட்டம், கிளிநொச்சியில் ஆரம்பமானது.

இச்செயற்திட்டத்தின் முதல் நாளான இன்று காலை 9 மணிக்கு கிளிநொச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி “அடையாளப்படுத்தப்பட்ட 100 நாள் செயல்முனைவு“ என்ற அடிப்படையில் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு, மாகாணத்திற்குள் மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வினை முன்வைத்து தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்று முதல் நவம்பர் மாதம் 8ஆம் திகதி வரை தொடர்ச்சியாக 100 நாட்களுக்கு சுழற்சி முறையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This