மைத்திரியிடம் 07 மணிநேரம் வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சுமார் 07 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி வழங்கியமை தொடர்பான விசாரணைகளுக்காக மைத்திரிபால சிறிசேன வாக்குமூலம் வழங்குவதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று தி ங்கட்கிழமை (21) காலை முன்னிலையானார்.
வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.