
வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் (13) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில், மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கக்கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES இலங்கை
