மத்திய வங்கிக்கு முன்னால் போராட்டம்

On Max DT பிரமிட் நிதி முதலீட்டு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பங்குதாரர்கள் குழுவொன்று
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
மத்திய வங்கிக்கு முன்னால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமக்கு இடம்பெற்றுள்ள அநீதி தொடர்பில் கவனம் செலுத்தி இழப்பீட்டு முறையை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
On Max DT பிரமிட் நிதி முதலீட்டு வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடர்பில் டுபாயில் கைது செய்யப்பட்ட கணனிப் பொறியியலாளர் கயன் விக்கிரமதிலக்க அண்மையில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு மார்ச் மாதம் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.