மத்திய அரசு, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துள்ளதாக தகவல்

தமிழகத்தின் கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டு வர தமிழக அரசு தீர்மானித்து திட்ட அறிக்கையை, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த நிலையில் இந்த அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் தொகையை காரணம் காட்டி திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகரங்களுக்கு மெட்ரோ திட்டம் என மத்திய அரசு தெரிவிக்கிறது.
இரண்டு மாநகர் பகுதிகளிலும் 20 லட்சத்திற்கும் குறைவாகவே மக்கள் தொகை இருப்பதாக விளக்கம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
