பல மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வெளிநாட்டவர் இருவர் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 5.88 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று வியாழக்கிழமை காலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் பொதிகளிலிருந்து 196 சிகரெட் அட்டைப்பெட்டிகளில் 39,200 வெளிநாட்டு சிகரெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 12 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.