திடீரென தீப்பிடித்த பஸ் – ஒருவர் பலி

அநுராதபுரம் ஜெதவனாராமய தாது கோபுரத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்று திடீரென
தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த பஸ் பலாங்கொடையில் இருந்து அனுராதபுரத்திற்கு புனித யாத்திரைக்காக வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பஸ்ஸில் உறங்கிக்கொண்டிருந்த எம்பிலிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.