தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை அதிகரிக்கும் சாத்தியம்

தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை அதிகரிக்கும் சாத்தியம்

இந்தியாவின் தமிழகத்தில் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை அதிக வெப்பநிலை பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் 2 – 3° செல்சியஸ் இயல்பை விட வெப்பநிலை அதிகமாக பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறட்சி நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This