உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதலில் நால்வர் உயிரிழப்பு

உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதலில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதல் உக்ரைன் ஜனாதிபதியின் சொந்த ஊரில் நடத்தப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா மற்றும் பிரித்தானிய குடிமக்கள் உட்பட மனிதாபிமான அமைப்பின் தன்னார்வலர்கள் ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும், தாக்குதலுக்கு முன்பே தங்கள் அறைகளை விட்டு அவர்கள் வெளியேறியதாகவும் உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பிரஸ்ஸல்ஸில் இன்று பிற்பகல் ஐரோப்பிய தலைவர்களுடனான உச்சிமாநாட்டிற்கு ஜெலென்ஸ்கி தயாரான போது கிரிவி ரிஹ் நகரில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.