உக்ரைன் ஜனாதிபதிக்கு வலுக்கும் ஆதரவுகள்

உக்ரைன் ஜனாதிபதிக்கு வலுக்கும் ஆதரவுகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மோதலுக்குப் பின்னர் உக்ரேனிய ஜனாதிபதி செலென்ஸ்கிக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ளன.

இதன் தொடர்ச்சியாக உக்ரேனுக்கு நிதியுதவியை அதிகரிக்க நோர்வே திட்டமிட்டு வருகிறது.

உக்ரேனுக்கான நிதியுதவிக்காக நாடாளுமன்றத்தில் அரசாங்கம் கோரிக்கை விடுக்கும் என நோர்வே பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே லண்டனில் ஐரோப்பிய தலைவர்களையும் உக்ரேனிய ஜனாதிபதி செலென்ஸ்கியையும் நோர்வே பிரதமர் ஸ்டோயர் இன்று ஞாயிற்றுக் கிழமை சந்திக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share This