அதிக வருமானம் கொண்ட நாடாக இந்தியா மாறுவதற்கு 7.8% வளர்ச்சி தேவை – உலக வங்கி அறிக்கை

அதிக வருமானம் கொண்ட நாடாக இந்தியா மாறுவதற்கு 7.8% வளர்ச்சி தேவை – உலக வங்கி அறிக்கை

2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா உயர் வருவாய் கொண்ட நாடாக மாறுவதற்கு சராசரியாக 7.8 சதவீத வளர்ச்சி தேவை என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இந்தியப் பொருளாதாரம் 4 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. தனிபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 3 மடங்காகியுள்ளது.

உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு 2000 ஆம் ஆண்டில் 1.3% ஆக இருந்தது. இது 2023 ஆம் ஆண்டில் இரு மடங்காக, அதாவது 3.4% ஆக அதிகரித்துள்ளது.

உலகின் ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது.

2000 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை இந்தியா சராசரியாக 6.3 சதவீத வளர்ச்சி அடைந்துள்ள போதிலும் 2047 ஆம் ஆண்டுக்குள் அதிக வருமானம் கொண்ட நாடு என்ற இலக்கை அடைவது வழமையான வணிக சூழ்நிலையில் சாத்தியமில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தியாவின் தனிநபர் மொத்த தேசிய வருமானம் தற்போதைய நிலையை விட சுமார் 8 மடங்கு அதிகரிக்க வேண்டும். வளர்ச்சி மேலும் துரிதப்படுத்தப்பட வேண்டும்.

இந்த இலக்கை அடைய இந்தியா தற்போதைய முயற்சிகளை தொடர்வது மாத்திரமின் சீர்திருத்தங்களை விரிவுபடுத்தவும் தீவிரப்படுத்தவும் வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This