மோட்டார் சைக்கிளுடன் குரங்கு மோதியதில் இளம்குடும்ப பெண் பரிதாப மரணம்

புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
நேற்று (24.02.2025) மாலை இடம்பெற்ற விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
புதுக்குடியிருப்பு பகுதியில் மரணச்சடங்கு ஒன்றில் கலந்துவிட்டு வீடு திரும்பிய வேளை புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் மோட்டார் சைக்கிளில் கணவர், மனைவி, ஆறு மாத குழந்தையுடன் பயணித்து கொண்டிருந்த வேளை குரங்கு ஒன்று குறுக்கே பாய்ந்துள்ளது.
இதில், தாய் தலையில் அடிபட்டதனால் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி தாய் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் ஒட்டிசுட்டான் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான அகிலன் தனுஷியா என்ற 35 வயதான இளம் குடும்ப பெண்ணே உயிரிழந்தவராவார்.
மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(பாலநாதன் சதீசன்)