சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்றுடன் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் நிறைவடையவுள்ளது.
இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலை உள்ளிட்டவற்றை எடுத்து செல்லும் ஊர்வலம் சிவனொளிபாத மலை அடிவாரத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாவட்ட பௌத்த விவகார ஒருங்கிணைப்பு அதிகாரி வணக்கத்திற்குரிய மொரஹேல சுகதஜோதி தேரர் தெரிவித்துள்ளார்.
சிவனொளிபாத மலை யாத்திரை காலம் கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.