மெதவெவ பகுதியில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

மெதவெவ பகுதியில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

கெகிராவ பொலிஸ் பிரிவின் மெதவெவ பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் இருந்து எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கெகிராவ பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கெகிராவ பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின் போது, ​​குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் கெகிராவை மெதவெவ பகுதியில் வசித்து வந்த 40 வயதுடைய திருமணமான மூன்று குழந்தைகளின் தாய் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

உயிரிழந்த பெண் அனுராதபுரம் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்தவர் என்பது பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இறந்த பெண்ணின் எரிந்த உடல், அவர் வசித்து வந்த வீட்டிலிருந்து சுமார் 20 மீட்டர் தொலைவில் உள்ள தோட்டத்தில் கிடப்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின்படி, இந்தப் பெண்ணுக்கு நேற்று (17) காலை மாரடைப்பு ஏற்பட்டதாகவும், குறித்த மரணம் தற்கொலையாக இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Share This