பொடி மெனிகே ரயிலுக்கு அடியில் சிக்கிக்கொண்ட பெண் – பத்திரமாக மீட்பு

பொடி மெனிகே ரயிலுக்கு அடியில் சிக்கிக்கொண்ட பெண் – பத்திரமாக மீட்பு

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிய பயணித்த பொடி மெனிகே ரயிலில் மோதி பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவைக்கு அருகில் இந்தச் சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்படட்டுள்ளது.

ரயிலின் இயந்திரத்தில் மோதிய பெண் இயத்திரத்தின் அடியில் சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், காயமடைந்த பெண் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share This