வீடு தீப்பற்றியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு

வீடு தீப்பற்றியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு

கொஸ்வத்த பொலிஸ் பிரிவின் கொமுல்ல பகுதியில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (01) மாலையில் நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 79 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தப் பெண் தனது பேத்தியுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார். சம்பவம் நடந்த நேரத்தில், பேத்தி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தார்.

இறந்தவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், சிறிது காலம் வீட்டிலேயே தங்கியிருந்ததாகவும், வீட்டில் எரிந்த விளக்கு ஒன்று விழுந்து தீப்பிடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மாரவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொஸ்வத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This