பிரான்ஸில் கடந்த பல தசாப்தங்களில் ஏற்படாத பேரழிவை ஏற்படுத்திய காட்டுத்தீ

பிரான்ஸின் ஆடே பகுதியில் ஏற்பட்ட பாரிய காட்டுத்தீ காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த காட்டுத் தீ கடந்த பல தசாப்தங்களில் ஏற்படாத பேரழிவை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தாலும், முழுமையாக அணைக்கப்படவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக சுமார் 42,000 ஏக்கர் காடுகள் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 2,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் பலர் பாடசாலை மற்றும் சமூக மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் வியாழக்கிழமை இரவு, சுமார் 2,000 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.