மனைவியின் தகாத உறவு…காதலனைக் கொன்ற கணவன்

மனைவியின் தகாத உறவு…காதலனைக் கொன்ற கணவன்

மாதம்பே பகுதியில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் ஆண் மற்றும் பெண் என இருவர் வெட்டுக் காயங்களுடன் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த பொலிஸார் இருவரையும் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். ஆனால், குறித்த ஆண் உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரின் விசாரணையில் காயமடைந்த பெண்ணின் கணவரே இக் கொலையை செய்தவரென்றும் மனைவியின் தகாத உறவே அதற்குக் காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்தவர் மாதம்பே பகுதியைச் சேர்ந்த 60 வயதான நபர் என்பதும் கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவர் பட்டியகம பகுதியைச் சேர்ந்த 45 வயது நபர் என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This