வத்திக்கானின் பதில் தலைவராக கெவின் பெரல் கர்தினால் ஆண்டகை நியமனம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 வயதில் உயிரிழந்ததைத் தொடர்ந்து வத்திக்கானின் பதில் தலைவராக அமெரிக்காவின் கெவின் பெரல் கர்தினால் ஆண்டகை நியமிக்கப்பட்டுள்ளார்.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் இலத்தீன் அமெரிக்கத் தலைவரான பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் பக்கவாதம் மற்றும் மாரடைப்பினால் உயிரிழந்ததாக
வத்திக்கான் நேற்று திங்கட்கிழமை அறிவித்தது.
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இந்த வருடம் இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டு கடந்த பெப்ரவரி மாதம் ரோமிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.
நேற்றுமுன்தினம் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகளில் அவர் இறுதியாக கலந்துகொண்டு ரஷ்ய – யுக்ரேன் போர் மற்றும் இஸ்ரேல் – காஸா மோதல் என்பன முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.
பாப்பரசரின் விருப்பத்திற்கமைய இறுதிக்கிரியைகள் எளிமையான முறையில் இடம்பெறவுள்ளன.