
போர் முடிவை நாங்கள் தான் தீர்மானிப்போம் – அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி
“மத்திய கிழக்கில் போரின் முடிவை நாங்கள்தான் தீர்மானிப்போம்” என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மோதல் விரைவில் நிறைவடையும் என கூறியதையடுத்து,
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கையொன்றை வெளியிட்டு
இதனை அறிவித்துள்ளது.
பிராந்தியத்தின் தற்போதைய நிலையும், எதிர்கால மாற்றங்களும் ஈரானிய ஆயுதப் படைகளின் கட்டுப்பாட்டிலேயே
உள்ளது என்றும் அமெரிக்கப் படைகளால் போரை நிறுத்த முடியாது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்தால், இந்தப் பிராந்தியத்திலிருந்து “ஒரு லீற்றர் எண்ணெய்
கூட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்க மாட்டோம் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு பின்னர் போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஈரானின் இந்த அறிக்கை உலக நாடுகளிடையே குறிப்பாக எரிசக்தி சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
