தாவூத் இப்ராஹிம் குழு குறித்த எச்சரிக்கை – எதிர்வினையாற்றியுள்ள இலங்கை

இந்திய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவான தாவூத் இப்ராஹிம் குழுவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் இடையிலான புதிய கூட்டணி குறித்து அரசாங்கம் எதிர்வினையாற்றியுள்ளது.
இது குறித்த இந்திய உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து இலங்கையில் நடைபெறும் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைக்கும் எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறித்து குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்த குறிப்பிட்ட தகவல் குறித்து தனக்குத் தெரியாது என கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், போதைப்பொருள் வர்த்தகத்தை எதிர்த்துப் போராட அரசாங்கம் ஏற்கனவே பாரிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கை நடந்தால், நாங்கள் நடவடிக்கை எடுப்போம். பொலிஸாருக்கு இது குறித்து தகவல் கிடைத்திருக்கலாம், அவர்கள் அதன்படி செயல்படுவார்கள்.” என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாவூத் இப்ராஹிம் குழு, தென்னிந்தியா மற்றும் இலங்கை வழியாக அதன் போதைப்பொருள் வலையமைப்பை விரிவுபடுத்துவதற்காக முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படுவதாக இந்திய உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் பிற மாநிலங்களில் தீவிரப்படுத்தப்பட்ட சட்ட நடவடிக்கைகள் காரணமாக மேற்கு மற்றும் வட இந்தியாவில் தாவூத் இப்ராஹிம் குழு பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளது.
இதனால், புதிய வழிகளைத் தேடி, இந்தக் குழு தற்போது தமிழ்நாடு மற்றும் இலங்கை முழுவதும் விடுதலைப் புலிகளின் கடத்தல் வலையமைப்பைப் பயன்படுத்தி போதைப்பொருட்களைக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக அந்த எச்சரிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
