விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு?

விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு?

அவுஸ்திரேலிய தொடருக்கு பின்னர் மூத்த வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஓய்வு பெறுவதாக வெளியான வதந்திகளை இந்திய கிரிக்கெட் சபையின் துணை தலைவர் ராஜீவ் சுக்லா நிராகரித்துள்ளார்.

ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரை வெற்றிகொண்ட இந்திய அணிக்கு அவர் பாராட்டையும் இதன்போது தெரிவித்திருந்தார்.

அத்துடன், ஒருநாள் அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

அவர்கள் இருவரும் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியில் அவர்களின் இருப்பு முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்

இந்த தொடர் அவர்கள் இருவரின் கடைசி தொடர் என்ற வதந்திகளையும் ராஜீவ் சுக்லா நிராகரித்தார், இதுபோன்ற கூற்றுக்களை சொல்வது முற்றிலும் தவறு என்று வலியுறுத்தினார்.

ஓய்வு முடிவுகள் வீரர்களை மட்டுமே சார்ந்தது என்றும் அவர் கூறினார். கோலி மற்றும் சர்மா இருவரும் டெஸ்ட் மற்றும் டி20 வடிவங்களில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This