அத்துரலியே ரத்தன தேரருக்கு பிணை

அத்துரலியே ரத்தன தேரருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (12) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்போது தலா 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் 10,000 ரூபா ரொக்கப் பிணையிலும் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அபே ஜன பல கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெறுவதற்காக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் வேதனிகம விமலதிஸ்ஸ தேரரை கடத்தி அச்சுறுத்தியதாக ரத்தன தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This