யாழ்ப்பாணத்தில் வாகன விபத்து – ஒருவர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம்-கோப்பாய் சந்தியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த விபத்து இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
விபத்தின்போது காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் இருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
