ரஷ்ய – உக்ரைன் அமைதி ஒப்பந்தம் – தலையீட்டை கைவிட்ட அமெரிக்கா

ரஷ்ய – உக்ரைன் அமைதி ஒப்பந்தம் – தலையீட்டை கைவிட்ட அமெரிக்கா

ரஷ்ய – உக்ரைன் அமைதி ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தெளிவான அறிகுறிகள் இல்லாதபட்சத்தில் அமெரிக்கா சில நாட்களுக்கு அதில் தலையிடுவதை கைவிடும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ எச்சரித்துள்ளார்.

இந்த முயற்சியை வாரக்கணக்கிலோ அல்லது மாதக்கணக்கிலோ தொடரப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டிய பிற முன்னுரிமைகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா 2022 ஆம் ஆண்டில் உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது.

ட்ரம்ப் நிர்வாகம் விரைவாக ஒரு ஒப்பந்தத்தைப் பெற முடியும் என ஆரம்பத்தில் நம்பிக்கை இருந்தபோதிலும், முழுமையான போர் நிறுத்தத்தை எட்டுவதற்கான முயற்சிகள் இன்னும் நிறைவேறவில்லையென வோஷிங்டன் இரு தரப்பினரையும் குற்றம் சுமத்துகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்பதற்கு  முன்னர் தனது ஜனாதிபதி பதவியின் முதல் 24 மணி நேரத்திற்குள் போரை நிறுத்துவதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவது கடினம் என்பது தெளிவாகிறது என மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் போர் நிறுத்தம் விரைவில் முடிவடையக்கூடிய அறிகுறிகள் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

 

Share This