அமெரிக்க தொழிற்சந்தையில் சரிவு – ட்ரம்ப் பணிநீக்கம்

அமெரிக்க தொழிற்சந்தையில் சரிவு – ட்ரம்ப் பணிநீக்கம்

அமெரிக்க தொழிற்சந்தையில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, தொழிற்துறை உயர் அதிகாரி ஒருவரை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பணிநீக்கம் செய்துள்ளார்.

அவர் ஆதாரங்கள் இன்றி புள்ளிவிபரங்களை கையாள்வதாக ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறித்த அதிகாரி அரசு வெளியிடும் பொருளாதார தரவுகளின் நம்பகத்தன்மையை குறைக்கும் வகையில் செயற்பட்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வட்டி விகிதங்களை குறைக்காமை தொடர்பில் விமர்சித்து வந்த அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் அட்ரியானா குக்லர், தனது ராஜினாமாவை அறிவித்தார்.

இந்த இரட்டை அதிர்வுகள், ட்ரம்ப் நிர்வாகம் பொருளாதாரத்தில் அதிக கட்டுப்பாட்டை ஏற்படுத்த முயற்சி செய்கிறார் என்ற விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளன.

Share This