அமெரிக்கா – இந்தியா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நாளை மீண்டும் ஆரம்பம்

அமெரிக்கா – இந்தியா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நாளை  மீண்டும் ஆரம்பம்

அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நாளை செவ்வாய்க்கிழமை மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க பிரதிநிதிகள் குழு புதுடில்லிக்கு வருகை தந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது வர்த்தக விவாதங்கள் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பேச்சுவார்த்தைகள் பல்வேறு மட்டங்களில் இடம்பெற்று வருவதாக இந்திய வர்த்தக அமைச்சகத்தின் உயர் அதிகாரி  ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா விதித்த 50 வீத வரி விதிப்பு காரணமாக இந்தியா மற்றும் அமெரிக்கா  இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

இதன்பின்னர் இந்தியாவுடனான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  தெரிவித்தார்.

ட்ரம்ப்பின் கோரிக்கையை வரவேற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா மற்றும் அமெரிக்க உறவை வலுப்படுத்த வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் வழி வகுக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

Share This