பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான வாடகைக்கார் செலவுகள் குறித்து அவசர மீளாய்வு

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான வாடகைக்கார் செலவுகள் குறித்து அவசர மீளாய்வு

புகலிடக் கோரிக்கையாளர்களை ஹோட்டல்களில் இருந்து சந்திப்பு இடங்களுக்கு அழைத்துச் செல்லும் வாடகைகார் உள்ளிட்ட செலவுகள் குறித்து உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் அவசர மீளாய்வுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சில புலம்பெயர்ந்தோர் நூற்றுக்கணக்கான பவுண்டுகள் செலவில் நீண்ட தூரம் பயணித்தமையை பிபிசி வெளிகொணர்ந்தது.

புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் பொது வைத்தியாசலைக்கு 250 மைல் பயணம் மேற்கொண்டதாகவும் அதற்காக 600 பவுண்ட் செலவானதாகவும் கூறியிருந்தார்.

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை பேருந்து அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டாலும் மருத்துவ சந்திப்பு போன்ற பயணங்களுக்கு மட்டும் வாடகைக்கார் முன்பதிவு செய்யப்படுகிறது.

இதனால் அரசுக்கு மிகப்பெரிய செலவு ஏற்படுவதாகவும் சில சமயங்களில் குறுகிய தூரத்துக்கும் தேவையற்ற வாடகைக் கார் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த அமைப்பு முறையாக செயற்படுகிறதா என்பது குறித்து அரசு மற்றும் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Share This