UK அறிமுகப்படுத்தும் புதிய திறமையான தொழிலாளர் விசா விதிகள் – ஜூலை 22 க்கு முன்னால் விண்ணப்பியுங்கள்

UK அறிமுகப்படுத்தும் புதிய திறமையான தொழிலாளர் விசா விதிகள் – ஜூலை 22 க்கு முன்னால் விண்ணப்பியுங்கள்

எல்லோராலும் தற்போது அதிகமாக தேடப்படும் விடயமாகவும் பேசப்படும் விடயமாகவும் மாறியிருக்கிறது
UK Skilled Worker Visa புதிய விதிகள்.

அதாவது, பிரித்தானியா அறிமுகப்படுத்தவுள்ள புதிய திறமையான தொழிலாளர் விசா விதிகள். 2025 ஜூலை மாதம் 22 ஆம் திகதிக்கு பின்னர் இந்த விசாவில் பெரிய மாற்றங்கள் ஏற்படவிருக்கிறது.

இது இந்தியர்கள், குறிப்பாக IT, Engineering, Healthcare துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் முக்கியமான செய்தியாக அமைகிறது.

UK திறமையான தொழிலாளர் விசா என்பது,

மிகவும் திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை பிரித்தானிய தொழிலாளர் சந்தையில் கொண்டு வருவதற்கும், பின்னர் அவர்களை நிரந்தர குடியிருப்பாளர்களாக மாற்றுவதற்கும் UK திறமையான தொழிலாளர் விசா அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த விசா மூலம், பற்றாக்குறை தொழில் பட்டியலின் அடிப்படையில் பிற நாடுகளைச் சேர்ந்த திறமையான தொழிலாளர்களைத் தெரிவு செய்யலாம்.

அவர்கள் தொழிலாளர் சந்தை சோதனை இல்லாமல் சலுகைக் கடிதத்தைப் பெறவும், 05 ஆண்டுகள் வரை இங்கிலாந்தில் தங்கவும் தகுதி பெறுவார்கள்.

UK திறமையான தொழிலாளர் விசாவிற்கான தேவைகள்

குறிப்பிட்ட திறன்கள், தகுதிகள், சம்பளம் மற்றும் தொழில்கள் போன்ற வரையறுக்கப்பட்ட அளவுருக்களில் தகுதி பெற நீங்கள் 70 புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

நீங்கள் குறைந்தபட்ச இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது தகுதியான தொழில்கள் பட்டியலிலிருந்து 02 வருட திறமையான பணி அனுபவத்துடன் அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நீங்கள் உரிமம் பெற்ற ஸ்பொன்சரிடமிருந்து வேலை வாய்ப்பைப் பெற்றிருக்க வேண்டும்

வேலை வாய்ப்பு தேவையான திறன் மட்டத்தில் இருக்க வேண்டும் – RQF 3 அல்லது அதற்கு மேல் அல்லது அதற்கு சமமான தகைமை கொண்டிருக்க வேண்டும்.

RQF என்பது Regulated Qualifications Framework எனப்படும் U.K கல்வித் தரநிலை அமைப்பு. இது இங்கிலாந்தில் கல்வித் தகுதிகளை ஒரு தரவரிசைப்படுத்தும் அமைப்பு.

RQF Level 3 என்பது, A-Level கல்வி நிலைக்கு சமமானது , UK மாணவர்கள் 17–18 வயதில் நிறைவு செய்வார்கள்
Intermediate level qualification ஆக கருதப்படுகிறது.

Vocational training (தொழில்நுட்பக் கல்வி), NVQ Level 3 போன்றவை இதில் அடங்கும். ஆனால் ஜூலை 22 ஆம் திகதிக்கு பின்னர் இதில் மாற்றம் ஏற்படுகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள UK திறமையான தொழிலாளர் விசாவின் நன்மைகள்

விசா வைத்திருப்பவர்கள் விசாவில் சார்ந்திருப்பவர்களை அழைத்து வரலாம்

மனைவிக்கு விசாவில் வேலை செய்ய அனுமதி உண்டு.

விசாவில் இங்கிலாந்து செல்லக்கூடிய நபர்களின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை

குறைந்தபட்ச சம்பளத் தேவை £25600 இலிருந்து £30000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

 ஜூலை 22 ஆம் திகதிக்கு பின்னர் என்ன மாற்றம் ஏற்பட போகிறது ?

  • Skill level அதாவது தொழில் திறன் அளவு RQF 6+ (graduate level) ஆக உயர்த்தப்படுகிறது – RQF Level 3–5 தொழில் திறனை கொண்டர்வர்களுக்கு இது பாதகமாக அமையலாம் உதாரணமாக care assistant, technician, administrative assistant போன்ற வேலைகளுக்கு ஜூலை 22 க்கு பின்னர் Skilled Worker visa-க்கு பொதுவாக அனுமதி கிடையாது.
  • சம்பளத் தகுதிகள் (Salary Thresholds) -பொதுவான உயர்தகுதி சராசரி சம்பளம் £41,700 ஆக அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது.முன்பு £38,700 ஆகும்
    இந்த சம்பள உயர்வு, ஜூலை 22க்கு முன் உள்ள விண்ணப்பங்களுக்கு கூட பொருந்தும்
  •  Dependants (குடும்ப உறுப்பினர்கள்) –  RQF Level 3–5 வகைகளுக்கு புதிதாக visa வாங்குபவர்கள், dependants ஐ UK க்கு அழைத்து வர முடியாது.
    ஏற்கனவே உள்ளவர்கள் தப்பித்துவிடுவார்கள்.
  •  Immigration Salary List (ISL) பதிலாக Temporary Shortage Occupation List அறிமுகப்படுத்தப்படுகிறது.(TSL)
    TSL என்பது, குடும்பத்தை அழைத்து வர முடியாது, நிரந்தர குடியுரிமைக்கான வழி இல்லை இது ஒரு தற்காலிக தீர்வு மட்டும் (2026 க்குப் பின் நீட்டிக்க வாய்ப்பு குறைவு)

புதிய மாற்றத்தின் பாதமான விளைவுகள் என்ன?

UK வேலைவாய்ப்புகள் திறமையான பட்டதாரி தொழிலாளர்களுக்கே பிரதானமாக மாறும்.

Skill Level 3–5 வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான வாய்ப்பு குறையும்.

நீங்கள் visaக்கு தகுதியுள்ளவரா என்பதை உறுதிப்படுத்த, உங்கள் வேலை RQF Level 6-க்கு சமமா என்பதை சோதிக்க வேண்டும்.

UK திறமையான தொழிலாளர் விசாவிற்காக ஜூலை 22க்கு முன் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

உடனடியாக CoS வழங்க தயாரா என்பதை உறுதிசெய்யுங்கள்

ஜூலை 21, 2025க்கு முன் CoS பெற முயற்சியுங்கள் அப்போது பழைய விதிகள் பொருந்தும்

வெளியூர் Appointments மற்றும் சட்ட ஆவணங்கள் தயார் பண்ணி வைத்திருங்கள்

CoS-ஐ சமர்ப்பிக்கும் போதே dependent ஐ உறுதிப்படுத்துங்கள்

Share This