தலதா வழிபாடு – பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் உயிரிழப்பு

ஸ்ரீ தலதா வழிபாட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
புனித தந்ததாது கண்காட்சியை பார்வையிட வரும் பொதுமக்களைப் பாதுகாக்கும் கடமையில் இருந்தபோது திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக இவர்கள்உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு தங்கள் மரியாதைக்குரிய அஞ்சலியை செலுத்துவதாக, பொலிஸ் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.